சென்னை:
மிழக சட்டசபை நாளை கூடுகிறது.  காலை 11 மணிக்கு  திருத்திய தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர்  பன்னீர்செல்வம்  தாக்கல் செய்கிறார்.

சட்டசபை தேர்தல்  முடிந்து புதிய அரசு பதவி ஏற்றபின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 20ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால் தமிழக பட்ஜெட்டில் பல சலுகைகள் இருக்கும் என எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில், சட்டசபை கூட்டத்தொடரில் தமிழகத்தில்  தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, கூலிப்படையினரின் அட்டகாசம், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை, டாஸ்மாக் கடைகள் மூடுவது  போன்ற  பல பிரச்சினைகள் பற்றி   எதிர்க்கட்சிகள் பேச முடிவு செய்துள்ளன.
எதிர்க்கட்சி தலைவர்  மு.க.ஸ்டாலினும், இனிமேல் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யமாட்டோம். எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று அறிவித்து இருக்கிறார்.
இதன் காரணமாக  சட்டப்பேரவை கூட்டம் காரசாரமாக இருக்கும்  என எதிர்பார்க்கலாம்.