பட்ஜெட் கூட்டத்தொடர்: ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

Must read

சென்னை:

மிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், நாளை மாலை  திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. துணைமுதல்வர் ஓபிஎஸ் நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.  அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் வருகிற பிப்ரவரி 11 முதல் 16 வரை 5 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளை மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், சட்டமன்றத்தில் செயல்படுவது குறித்தும், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி வெற்றி வாய்ப்பு குறித்து விவாதிக்கபடும் என தெரிகிறது.

More articles

Latest article