கொல்கத்தா:

என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை மேற்கு வங்கத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில் ‘அசாம் மாநிலத்தில் வெளியான தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான இறுதிப் பட்டியலில்19 லட்சம் பேர் பெயர் விடுபட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்க சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,  “என்.ஆர்.சி என்ற குடிமக்கள் தேசியப் பதிவேடு என்பது பாஜக ஆட்சியின் பழிவாங்கல் நடவடிக்கையைத் தவிர வேறில்லை. ஆகவே இதனை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா,  என்.ஆர்.சி. என்பது பொருளாதாரச் சரிவு நிலையை திசைத்திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். நாட்டில் பாஜகவுக்கு எதிராகப் பேச ஒருவர் கூட இல்லை என்பதுதான் இன்றைய நிலை” என்று கடுமையாக சாடியவர், இது தொடர்பாக நிதிஷ்குமாரிடம் பேசியிருப்பதாகவும் கூறினார்.