சென்னை: “த.மா.கா.வின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முக்கிய முடிவு எடுப்போம்” என்று அக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர பெருமுயற்சி எடுத்தது த.மா.கா. ஆனால், அந்த கூட்டணி உறுதியாகாகததால், ம.ந.கூட்டணியுன் அணி சேர்ந்தது. இந்த முடிவை ஏற்காத பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் கட்சியைவிட்டு வெளியேறினார்கள்.
ம.ந.கூட்டணியுடன் அணி சேரந்து போட்டியிட்ட த.மா.கா. பெரும் தோல்வி அடைந்தது.  இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுத்தாக வேண்டிய நிலையில் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் வாசன் தலைமையில் நடந்தது.
download
இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளான ஞானதேசிகன், கோவை தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காலை தொடங்கி மதியம் வரை கூட்டம் நடந்தது.
கூட்டம் முடிந்தபிறகு பத்திரிகையளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், “வெற்றி தோல்வி என்பது ஒவ்வொரு இயக்கத்திற்கும் சகஜம் தான். அது கட்சியின் வளர்ச்சியை நிர்ணயிப்பது கிடையாது” என்றார்.
மேலும், ”தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பின் நான்கு  கட்டமாக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறேன்.  அவர்கள் தேர்தல் குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். வரும் 11ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட பின்பு, கட்சியின் செயல் திட்டம் என்ன என்பது பற்றி அறிவிப்பேன். மேலும்  எனது சுற்றுப்பயண திட்டம், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளையும் பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவிப்பேன். என்று வாசன் தெரிவித்தார்.