சென்னை:

திமுக கூட்டணியில் தமாகா இணையும் என்று தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன்  கூறி உள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள் சுறுசுறுப்பாக நடை பெற்று வரும் நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஜி.கே.வாசனுக்கு மயிலாடுதுறை ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.  ஆனால், இரட்டை இலை சின்னத்தல் போட்டியிட வேண்டும் என்று அதிமுக நிபந்தனை விதிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மதுரையில் பாஜக ஒருங்கிணைப்பாளர் முரளிதரராவை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் ஜி.கே. வாசன் சந்தித்து பேசினார்.

இதுகுறித்து  செய்தியளார்களிடம் பேசிய தமாகா மூத்த தலைவரான ஞானதேசிகன், அதிமுக கூட்டணியில் தமாகா இணையும் என்று என்று கூறினார்.