பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் சர்ச்சை இயக்குனராக திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.
இதனைத் தொடர்ந்து கர்ணன் படத்தை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த நிலையில் கலையரசன், நிகிலா விமல் ஆகியோரை வைத்து அடுத்த படத்தை இயக்கம் வேலையில் இறங்கினார்.
இந்தப் படத்திற்கு ‘வாழை’ என்று பெயர் வைத்துள்ள மாரிசெல்வராஜ் அதன் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
வாழை படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் இன்று தொடங்கியுள்ளது.
இதன் படப்பிடிப்பை நடிகரும் எம்.எல்.ஏ.-வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார்.