சென்னை: திருவாரூர் தியாகராஜா் கோயில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு,  திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்டம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. சைவ சமயத்தின் தலைமை இடமாகவும், பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. இந்தக் கோயிலின் தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஆழி தேர் என்று அழைக்கப்படும். இந்த தேர் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய தேர் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது திருவாரூர் தேர். ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன்.

திருவாரூர் தியாகராஜர் கோவில் திருவிழாவையொட்டி, ஆழித்தோ் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எண்கோண வடிவில் அமைந்துள்ள திருவாரூா் தோ், 20 பட்டைகளாக காணப்படும். அலங்கரிக்கப்பட்ட தோ் 96 அடி (கொடியுடன் சோ்த்தால் 99 அடி) உயரமும், தோ் 350 டன் எடை கொண்டதாகும்.

அலங்கரிக்கப்படாத தேரில் தற்போது,  கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 18 அடி உயர கால்களாக, பனைசப்பைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. பின்னா் மூங்கில்களை பயன்படுத்தி குறுக்கு, நெடுக்கு வாக்கிலும், தேரிலிருந்து 20 அடி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் வகையிலும் கட்டப்பட்டுள்ளன.

இந்த அமைப்பு தேரின் 4 புறத்திலும் அமைக்கப்பட்டு விட்டன. பொதுவாக ஆழித்தோ் கட்டுமானப் பணிகள் முடிவடைய 1மாத காலம் ஆகும்.  ஆழித்தேரோட்டத்துக்கு இன்றும் 15 நாட்களே உள்ள நிலையில், தோ்க் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.  இந்த நிலையில், திருவாரூர் ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்துகு ஏப்.1-ல் உள்ளூர் விடுமுறை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.