திருவண்ணாமலை:  பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும், அண்ணாமலையார் குடியிருக்கும் திருவண்ணாமலையில்,   புரட்டாசி பவுர்ணமி வரும் 6ந்தேதி வருகிறது. இதையொட்டி, பக்தர்கள் கிரிவலம் செல்லும் நேரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரின் அருள் பெற்று வருகின்றனர். அருணாச்சலேஸ்வரர் வீற்றிரும்,  மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

அதன்படி, புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த மாதம்  பவுர்ணமி வருகிற 6-ந்தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம்   பவுர்ணமி காலை 11.49 மணிக்கு தொடங்கி மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9.53 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.