சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் ஏற்றப்படும் நாளில், மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் 10ந்தேதி விமரிசையாக முடிவடைந்த நிலையில்,, வரும் 13ந்தேதி மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த ஆண்டு மலையில் மண்சரிவு நிகழ்வு ஏற்பட்டதால், பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் திட்டமிட்டபடி மகாதீபம் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், , மழை பாதிப்பு மற்றும் அருணாச்சலேஸ்வரர் மழை குறித்து, குறித்து மத்தியக் குழுவினர் மலைப்பகுதிக்கு சென்று நேற்று (11ந்தேதி) நேரடி ஆய்வு நடத்தினர். இதுதொடர்குறித்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
இங்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு , கார்த்திகை தீபத்திருவிழாவினை ஒட்டி திருவண்ணமலை வரும் பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி கிடையாது என்று கூறியதுடன், மலையில் மகாதீபம் ஏற்றப்படும்போது பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி கிடையாது என மாவட்ட கலெக்டர் அறிவிப்பார் என தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவை தொடர்ந்து வல்லுநர் குழு அளித்த அறிக்கையின்படி முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த அமைச்சர், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்காக, 4,500 கிலோ நெய் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், கோவிலில் இருந்து பரணி தீபத்தை காண 6,300 பேருக்கும் மகாதீபத்தை காண 11,600 பேருக்கும் அனுமதி தரும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
மகா தீபம்: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…