திருவண்ணாமலை :
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த தீப திருவிழாவில், கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக இந்த நாடு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மலையைச் சுற்றி வரும் பாதையில் பல்வேறு இடங்களில் காவல்துறை கண்காணிப்பும் கட்டுப்பாடும் இருந்ததால், குறைந்த அளவு பக்தர்களே கலந்துகொண்டனர்.
இருந்தபோதும், வழக்கமான உற்சாகத்துடன் இன்று காலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்பட்டது.
[youtube-feed feed=1]