திருவண்ணாமலை: சிவபெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா உலகப்புகர் பெற்றது. இந்த ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும் திருவண்ணாமலை கார்த்திகை தீப பெருவிழா நவம்பர் 27 ம் தேதி துவங்கி டிசம்பர் 06 ம் தேதி வரை நடக்கிறது. அதன் முழு விவரம் வெளியாகி உள்ளது.
தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோவில் கார்த்திகை தீப திருவிழா மற்றும் பெளர்ணமி கிரிவலம் ஆகியன மிகவும் பிரபலம். இந்த தலத்தில் சிவனே மலையாக வீற்றிருப்பதாக நம்பப்படுவதால் கிரிவலம் செல்வது பாவங்களை அழித்து, அனைத்து விதமான நலன்களையும் அளிக்கக் கூடியது.
திருவண்ணாமலையில், தீப திருவிழா முதலில் தீபாவளி நாளில் தொடங்கி ஒரு மாதம் தொடர்கிறது. அதைத்தொடர்ந்து கார்த்திகை தீப திருவிழா நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 27 ம் தேதி தொடங்கி டிசம்பர் 6ந்தேதி முடிவடைகறிது.
நவம்பர் 27ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா துவங்க உள்ளது.
நவம்பர் 30 ம் தேதி வெள்ளி கற்பகவிருட்சம், வெள்ளி காமதேனு வாகனத்தில் உண்ணாமலை அம்மையுடன், அண்ணாமலையார் உலா வந்து அருள்பாலிப்பார்.
டிசம்பர் 01 ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும்,
டிசம்பர் 02 ம் தேதி வெள்ளி ரதத்திலும் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற உள்ளது.
டிசம்பர் 03 ம் தேதி காலை 5.30 க்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள மகா ரத ஊர்வலம் நடைபெற உள்ளது
டிசம்பர் 06 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
. டிசம்பர் 06 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் பங்கேற்ற வருமாறு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளதால், மகா தீபத்தை தரிசிக்கவும், பெளர்ணமி கிரிவலம் வருவதற்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.