திருவள்ளூர்:

ரசின் உதவித்தொகைக்காக தீரமுடன் போராடிய மூதாட்டியின் செயலை பாராட்டி, அவரது காலைத்தொட்டு ஆசி பெற்றார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி அவரது செயல் அனைவரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் மகேஸ்வரி தலைமையில் பொதுமக்களிடம் குறை கேட்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை தெரிவித்து மனு கொடுத்தனர். அப்போது, திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த எல்லப்பன் நாயுடு கண்டிகை கிராமத்தை சேர்ந்த ராணியம்மாள் என்ற 80 வயது மூதாட்டி தனது தள்ளாடும் வயதிலும், மாற்றுத்திறனாளியான தனது மகனுக்கு அரசு உதவி தொகை கோரி மனு அளிக்க மக்களோடு மக்களாக காத்திருந்தார்.

வயதான மூதாட்டியை கண்ட கலெக்டர் மகேஸ்வரி அவரை உடடினயாக அழைத்து, நாற்காலி யில் அமரவைத்து அவரின் குறையை கேட்டறிந்தார். அவரிடம் இருந்த கோரிக்கை மனுவை வாங்கி, அவரது கோரிக்கையை உடனே நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது, இந்த தள்ளாத வயதிலும் மாற்றுத்திறனாளி மகனை பராமரிப்பதோடு உதவித்தொகை கேட்டு தாசில்தார் அலுவலகம் வரை வந்ததை பாராட்டி, ராணியம்மாளின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.  மூதாட்டி கலெக்டருக்கு வாழ்த்து கூறி ஆசி வழங்கினார். இந்த சம்பவம் அங்கு கூடி இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.