சென்னை:

மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடிகள் செய்த 500 ஆசிரியர் களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழகத்தில் இருமொழிக்கொள்கை என்பதில் மாற்றம் இல்லை, தமிழுக்காக அரசு முன்னுரிமை வழங்கி வருவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 19ந்தேதி தொடங்கி நடை பெற்றது. தேர்வு எழுதிய மாணவர்களின் சுமார் 60 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டது. இதில் 25 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றினர். அவர்கள் தேர்வுதாள் திருத்தியதில் பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளது, மறு மதிப்பீடு கோரி மாணவர்கள் தாக்கல் செய்ததில் தெரிய வந்தது.

விடைத்தாள் நகலை பார்த்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலரது விடைத்தாள்களில்  மதிப்பெண் கூட்டலில் தவறு இருப்பதும், பலரது விடைத்தாளில் சரியான முறையில் மதிப்பெண் போடப்படாததும் தெரிய வந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர் களின் பெற்றோர்கள்  தேர்வுத்துறை இயக்குரகத்தில் புகார் அளித்தனர். சுமார் 30 சதவிகித விடைத்தாள் திருத்தம் செய்ததில் தவறுகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய ஆசிரியர்களுக்கு என்ன தண்டனை என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. தங்களது சம்பளத்துக்கான போராடும் ஆசிரியர்கள், மாணவர்களின் வாழ்க்கையில் போராட்டத்தை ஏற்படுத்து விட்டார்களே என விமர்சிக்கப்பட்டது. தவறு செய்த ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தவறாக விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.