திருமலை: கடந்த ஆண்டு (2024) மட்டும் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.1,365 கோடி என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ம் ஆண்டு 2.55 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதுடன், உண்டியலில் ரூ.1,365 கோடி காணிக்கை செலுத்தி உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிய வந்துள்ளது.
2020-21ல் நிதி ஆண்டில் ரூ. 731 கோடியும், 2021-22ல் ரூ. 933 கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது. ருப்பதி கோவிலில் 2023-ம் ஆண்டு உண்டியல் காணிக்கை ரூ.1,398 கோடியாக கிடைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு 2.55 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.1,365 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில் திருப்பதி ஏழுமலையான் கோவில்தான். உலகில் அதிக வருமானம் பெறும் கோவிலாக, வாடிகனில் உள்ள ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்குச் சொந்தமான தேவாலயம் இடம்பெற்றுள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக பணம் படைத்த கோயில் திருப்பதி வெங்கடேஷ்வரர்தான். இதுதான் உலகிலேயே . ‘பணக்கார சாமி ‘ என்று அழைக்கப்படுகிறது.
அதனால்தான் திருப்பதியில் உள்ள ‘ஆனந்த நிலையம்’ நிரம்பி வழிந்தபடியே காட்சியளிக்கின்றது. தினசரி பல ஆயிரம் பேர், அன்றாடம் காயச்சி முதல் அம்பானி வரை பலர் வந்து ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். இங்குள்ள ஶ்ரீவாரி உண்டியலும், லட்டு பிரசாதமும் பக்தர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சியைத் தரும் உன்னதங்கள்.
மக்கள், தங்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள், பிரச்னைகளுக்கு மௌனமான தீர்வை மனதுக்குள் தேடி பிரார்த்தனை செய்கிறார்கள். எந்தத் திருத்தலத்தில் அந்தப் பிரார்த்தனை நல்லவிதமாக நிறைவேறுகிறதோ அந்தத் திருத்தலத்துக்கு இதய சுத்தியோடு சென்று தங்கள் காணிக்கையைச் செலுத்துவார்கள். அதன் பிறகு, அந்தத் திருத்தலத்தின் மகிமையை அந்த தெய்வத்தின் சக்தியை தங்கள் நண்பர்களிடம் தங்கள் உறவினர்களிடம் சொல்லி சிலாகிப்பார்கள். இவ்வாறு பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அதற்காக காணிக்கையாக பெறுவதில் திருப்பதி கோவிலே முன்னணியில் உள்ளது. அதனால்தான், பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை இறைவனுக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்த கோவிலில், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு கோவிட் முன்பு தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் .இதனால் கோவில் உண்டியல் காணிக்கை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வெகுவாகக் குறைந்தது. 2020-21ல் நிதி ஆண்டில் ரூ. 731 கோடியும், 2021-22ல் ரூ. 933 கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது அதன் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக தினசரி சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 70,000 ஆக குறைந்தாலும் கோயிலின் உண்டியல் வருமானம் ரூ. ஆயிரம் கோடியைத் தாண்டியே கிடைத்து வருகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு உண்டியல் காணிக்கை ரூ.1,398 கோடியாக கிடைத்து நிலையில், 2024ம் ஆண்டு, ரூ.1,365 கோடி வருமானம் உண்டியல் மூலம் கிடைத்துள்ளது. 2024ம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31-ம் தேதி உண்டியல் வருமானம் ரூ.4.10 கோடி கிடைத்தது.
இதுமட்டுமின்றி, 2025 புத்தாண்டு (ஜனவரி 1ந்தேதி) அன்று மட்டும், 69 ஆயிரத்து 630 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், 18, 965 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தி‘ உண்டியலில் ரூ.3.13 கோடி காணிக்கை செலுத்தி உள்ளதாகவு தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.