திருமலை: திருப்பதி ஏழுமலையானை செப்டம்பர் மாதம் தரிசிப்பதற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஓராண்டாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் சிறப்பு தரிசனத்துக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இலவச தரிசனம் மற்றும் ரூ. 300 டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் தீர்ந்து போனதால் பக்தர்கள் பலர் அவதிப்பட்டனர். அத்துடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தெரியாத பக்தர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையடுத்து, மீண்டும் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை மக்களுக்கு நேரடியாக வழங்கி வருகிறது. இருந்தாலும் சிறப்பு தரிசனத்துக்கான ரூ.300 டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது. அதன்படி, அடுத்த மாதத்திற்கான (செப்டம்பர்) ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணி அளவில் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.