பெங்களூரு: தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருப்பதி செல்ல வேண்டிய இன்டிகோ விமானம் பெங்களூருக்கு திரும்பிய நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம்  மேலும்  ரூ.5000 கட்டணம் கேட்டதாக  இன்டிகோ விமான நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 15ந்தேதி அன்று ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி புறப்பட்ட இன்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பெங்களூரில் தரையிறக்கப்பட்டது.  காலை 9.00 மணிக்கு புறப்பட்ட விமானம் திருப்பதியில் காலை 10.30 மணியளவில் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால், அது திருப்பதி விமான நிலையத்தில் தரையிறங்காமல் சிறிது நேரம் சுற்றி வந்ததது. பின்னர், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளின் கூற்றுப்படி, மோசமான வானிலை காரணமாக விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதாக முதலில் பணியாளர்கள் கூறியுள்ளனர், ஆனால் பின்னர் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாகக் கூறினர்.

இந்த விமானத்தில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸில் எம்.எல்.ஏவான நடிகை ரோஜாவும் பயணம் செய்தார்.  இது குறித்து  நடிகை ரோஜா வீடியோ வெளியிட்டிருந்தார். “இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எங்களை இறங்க அனுமதிக்காததால் நாங்கள் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டோம்” என்று திரைப்பட நடிகரும் எம்எல்ஏ ரோஜா குற்றம் சாட்டினார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.  இந்த நிலையில், அந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் இன்டிகோ விமான நிறுவனம் மேலும் ரூ.5000 கட்டணம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு  காரணமாக விமானத்தை பைலட்,  பெங்களூருவில் தரையிறங்கியதும், பயணிகள் இறங்க முயன்றபோது, ​​விமான ஊழியர்கள் ரூ. 5000 கூடுதலாக செலுத்துமாறு  இண்டிகோ கூறியதாகக் கூறப்படுகிறது.

கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த பயணிகள் கடுமையாக மறுத்ததை அடுத்து, விமான நிறுவனம் இறுதியாக அவர்களை பெங்களூரில் இறங்க அனுமதித்ததாகவும், ஆனால், பெங்களூரில் இறங்கிய பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்று இண்டிகோ மறுப்பு  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  பயணிகளுக்கு விமானத்தில் குளிர்பானம் வழங்கப்பட்டது, பராமரிப்பு சோதனைகளுக்குப் பிறகு விமானம் விடுவிக்கப்பட்டது. சில பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க விரும்பியதால், அவர்கள், அடுத்த விமானத்தில் தங்க வைக்கப்பட்டனர். சிலரின் வேண்டுகோளின்படி விமானம் அல்லது விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனம். மேலும், பெங்களூரு விமான நிலையத்தில் தானாக ஏற்றிச் செல்ல முடிவு செய்த  திருப்பதி பயணிகளிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை” என்று விமான நிறுவனம்  தெரிவித்துள்ளது.