திருப்பதி: கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளுக்கு மத்தியிலும், திருப்பதி ஏழுமலையான் கோவில் வருமானம் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. கடந்த மாதம் (மார்ச்) உண்டியல் வசூல் 104 கோடி என  தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் கொரோனா நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டதையடுத்து, திருப்பியில்  தினசரி 50ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், உண்டியல் வசூலும் கூடி வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.3 கோடி உண்டியல் வசூலாகி வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதம் (மார்ச்)(  மட்டும்  16 லட்சத்து 27 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் மூலம்  ரூ.104 கோடி உண்டியல் காணிக்கையாக  கிடைத்துள்ளதாகவும்,   7 லட்சத்து 84 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்,  82 லட்சத்து 77 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என திருப்பதி தேவஸ்தானம்  தெரிவித்துள்ளது.