திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசினத்துக்காக  மே மாத  டிக்கெட்  இன்று காலை 10மணிக்கு வெளியாகிறது. பக்தர்கள்,   ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத அர்ஜித சேவா, சுப்ரபாதம், தோமாலா மற்றும் அர்ச்சனா சேவைகளுக்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பிப்ரவரி 20ஆம் தேதி காலை 10 மணி வரை இந்த டிக்கெட்களைப் பெறலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  கல்யாண உற்சவ ஊஞ்சல் சேவா, அர்ஜித பிரம்மோத்சவம், சஹஸ்ர தீபாலங்கர சேவா டிக்கெட்கள் பிப்ரவரி 21ஆம் தேதி காலை 10 மணிக்கும், மெய்நிகர் சேவைக்கான டிக்கெட் பிற்பகல் 3 மணிக்கும் வெளியிடப்படும்.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு பிப்ரவரி 22ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும்.

300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்களுக்கான ஒதுக்கீடு பிப்ரவரி 24ஆம் தேதி காலை 10 மணிக்கும், தங்குமிட வசதிக்கான டிக்கெட் பிற்பகல் 3 மணிக்கும் வெளியிடப்படும்.

இந்த டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.