திருப்பதி

திருப்பதி கோவிலுக்குப் பாதயாத்திரையாக வந்த ஆந்திர பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தமிழக பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

 

ஆண்டு தோறும் திருப்பதி மலைக்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் வ்ரதம் இருந்து செல்வது வழக்கமாகும்.   இது கடந்த 25 ஆண்டுகளாக நடந்து வருகிறது.   இந்த ஆண்டு 26 ஆம் ஆண்டாகும்.  இவர்களில் 150 பேருக்கு மட்டும் ஆன்லைனில் சர்வதரிசன டிக்கட்டுகள் கிடைத்துள்ளன.  மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை.

இருப்பினும் தேவஸ்தான அதிகாரிகளைச் சந்தித்து விவரத்தைக் கூறி தரிசனம் செய்யலாம் என்னும் நம்பிக்கையில் இவர்கள் கடந்த 22 ஆம் தேதி புறப்பட்டு நேற்று திருப்பதி மலை அடிவாரத்துக்கு வந்துள்ளனர்.   ஆனால் அலிபிரி அருகே இவரக்ள் தடுத்து நிறுத்தப்பட்டு தரிசன டிக்கட்டுகள் உள்ளோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.  சுமார் 1 மணி நேரம் கெஞ்சியும் அனுமதிக்கப்படாததால் டிக்கட் இல்லாதோர் திரும்பி உள்ளனர்.

கடப்பா ராஜம்பேட்டை பகுதியில் அன்னமாச்சாரியார் நடந்து வந்த பாதை என ஒரு பாதை உள்ளது.   ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து சுமார் 5000 பக்தர்கள் இந்த பாதையில் பாத யாத்திரையாக வந்துள்ளனர்  முன் அனுமதி இன்றி வந்த இவர்களைத் தேவஸ்தான அதிகாரிகள் தரிசனம் செய்ய அனுமதித்துள்ளனர்.

இவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் கடப்பா மாவட்டம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த மாவட்டம் என்பதாலும் இந்த 5000 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அதே வேளையில் தமிழகத்தை சேர்ந்த்வர்கள் என்பதால் 250 பேரைத் தேவஸ்தானம் அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.