திருப்பதி,
சென்னையில் இருந்து திருப்பதி சென்றுவர ஐஆர்சிடிசி புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
பொதுவாக திருப்பதிக்கு செல்ல விரும்புவர்கள் பஸ்சை பிடித்து கீழ்திருப்பதி சென்று பின்னர் அங்கிருந்து மேல் திருப்பதி செல்வது வழக்கம். அங்கு வரிசையில் நின்ற ஏழுமலையானை தரிசித்து திரும்புவர்.
ஆனால், தற்போது ஆந்திர போக்குவரத்துக்கழகம் திருப்பதி செல்ல விரும்பும் பயணிகளுக்காக விரைவான சேவையை வழங்கி வருகிறது. ஒரேநாளில் திருப்பதி சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வகையில் பஸ் வசதியை செய்துள்ளது.
அதேபோல் ரெயில்வே சுற்றுலாத்துறை துறையும் தற்போது சேவையை தொடங்கி உள்ளது. குறைந்தது 12 பேர் சேர்ந்து குழு பயணமாக செல்ல விரும்பினால், அவர்களுக்கான சேவையை இந்திய ரயில்வேயின் சுற்றுலாக் கழகம். (Indian Railway Catering and Tourism Corporation) வழங்கி வருகிறது.
.IRCTC சுற்றுலாக்கழகத்தின் சென்னை எண் 90031 40681 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு 12 பேர் இந்த தேதியில் சென்று வர விரும்புகிறோம் என்று சொன்னால் போதும். அடுத்தது புக்கிங் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
இந்த சேவையில் ஒரு நபருக்கு 1550 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நாம் திருப்பதி செல்ல புக் செய்த நாள், குளிர்சாதன வசதி கொண்ட ஒரு டெம்போ டிராவலர் மூலம் அழைத்து செல்கிறது. சென்னையில் காலை 5 மணிக்கு புறப்படுகிறது என்றால் காலை 8.30 மணிக்கு கீழ் திருப்பதி சென்றடையும். அங்கு ஒரு ஓட்டலில் காலை உணவு.
அதைத்தொடர்ந்து மேல்திருப்பதிக்கு அழைத்து செல்வார்கள். முற்பகல் 11 மணி அளவில், அனை வருக்கும் 300 ரூபாய் கட்டண வழியில் உங்களை தரிசனம் செய்ய அனுப்பி வைக்கப்படுவார்கள். திருமலையில் கூட்டத்தை பொருத்து தரிசன நேரம் மாறுபடலாம்.
தரிசனம் முடிந்தும், கீழ் திருப்பதி அழைத்து வரப்பட்டு, அனை வருக்கும் மதிய உணவு வழங்கப்படும். இதற்கிடையில் மொட்டை போட விரும்பினால், அதற்கும் ஏற்பாடு செய்யப் படும். மேலும் லட்டு வாங்க விரும்பினால்ர, IRCTC பணியாளர்கள் அதை வாங்கி வைத்திருந்து தரிசனம் முடித்து விட்டு நீங்கள் வெளியே வரும்போது உங்கள் கைகளில் கொடுத்து விடுகின்றனர்.
அதைத்தொடர்ந்து கீழ் திருப்பதியில் உள்ள அலர்மேலு மங்காபுரம் அழைத்து செல்லப்படுவர். அங்கு தரிசனம் முடித்துவிட்டு உடடினயாக சென்னை அழைத்து வரப்படுவார்கள்.
இந்த வசதிகளை பெற ஒரு நபருக்கு இரண்டு வேளை உணவு மற்றும் தரிசன கட்டணம் ஆகியவற்றுடன் 1550 மட்டுமே.
பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி பயன்படையலாம் என்று ஐஆர்டிசிடிசியின் ரவீந்திரன் கூறியுள்ளார்.