மயில் பாறை முருகன் கோயில், குருசிலாப்பட்டு, திருப்பத்தூர்
திருப்பத்தூர் அடுத்த குருசிலாப்பட்டு அருகே அமைந்துள்ளது மயில் பாறை முருகன் கோயில். இக்கோயில் அடர்ந்த வனப்பகுதி நடுவில் மயில்கள் ஆடும் சோலைவனமாக அமையப் பெற்றிருக்கிறது.
இக்கோயிலில் முருகப்பெருமான், சிவன், நாகாளம்மன், விநாயகர், ஆஞ்சநேயர், முருகவேல் என அனைத்து தெய்வங்களும் இங்கு அமையப் பெற்றுள்ளது.
ஆலயத்தில் நாள்தோறும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகிறது. தைப்பூசம், ஆடிக் கிருத்திகை ஆடிப்பெருக்கு என முருகனுக்கு உகந்த நாட்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்பெற்றுச் செல்கின்றனர்.
இந்த கோயில் தரைமட்டத்திலிருந்து 300 படிக்கட்டுகள் கடந்து சென்ற முருகனை வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இக்கோயிலுக்கு வந்து சென்றால் குழந்தை பாக்கியம், திருமணத் தடை, பில்லி சூனியம், பேய், பிசாசு அனைத்தும் நீங்குவதாக இந்த கோயிலின் சிறப்பம்சமாக விளங்கி வருகிறது.
ஆலயத்தில் வேண்டுதல் நிறைவேறி பலன் கிடைப்பதனால் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பொருட்களாக அதிகளவில் ஆலயமணி, ஆலய கட்டட பொருட்கள், அன்னதானங்கள் என அளித்து வருகின்றனர்.
அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதனால் இங்கிருக்கும் அபார சக்திகளால் ஆலயத்திற்கு மயில்கள் வந்து ஆடும் ஆலயமாக விளங்கி வருகிறது. எனவே இதற்கு மயில் பாறை எனப் பெயர் பெற்று விளங்கி வருகிறது.