திருப்பதி

திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் எப்போது தொடங்கும் என்பது குறித்து கோவில் செயல் அதிகாரி பேட்டி அளித்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து அனைத்து  புகழ்பெற்ற ஆலயங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.  இதில் திருப்பதி கோவிலும் ஒன்றாகும்.  அதன்பிறகு கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் கட்டுப்பாடுகளுடன் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

அவ்வகையில் திருப்பதி கோவிலில் தற்போது வி ஐ பி மற்றும் ஆன்லைன் மூலம் அளிக்கப்படும் ரூ.300 டிக்கட்டுகள் மூலம் மட்டுமே பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.  வழக்கமாக நடக்கும் இலவச தரிசனம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.  இதை மீண்டும் தொடங்க பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி ஒரு பேட்டியில், “சென்ற வருடம் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட இலவச தரிசனத்தை மீண்டும் அமல்படுத்தும்படி பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு குறையாத நிலையில் அடுத்தகட்டமாக 3வது அலையை எதிர்நோக்கி உள்ளோம்.

ஆகவே கொரோனா முற்றிலுமாக நீங்கிய பின்னரே இலவச தரிசனத்தை மீண்டும் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இலவச தரிசனம் தொடங்கினால் பக்தர்கள் வருகை அதிகரிக்கும். இதுவே கொரோனா பாதிப்புக்கு வழிவகுக்கும். ஆகவே பக்தர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ₹300 சிறப்பு தரிசனத்தைத் தினமும் 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் டோக்கன்களாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதே நடைமுறையே தொடரும்.” எனத் தெரிவித்துள்ளார்.