திருப்பதி

ப்ரல்,. மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான திருப்பதி சிறப்பு தரிசன ரூ.300 டிக்கட்டுகள் ஆன்லைனில் வரும் 21 முதல் 23 வரை 3 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 சிறப்புத் தரிசன டிக்கட்டுகள் ஆனலைன் மூலம் ஒரு மாதத்துக்கான டிக்கட்டுகள் குறிப்பிட்ட தினங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.   தவிர இலவச தரிசனத்துக்கான டிக்கட்டுகள் தினசரி 30000 வீதம் திருப்பதியில் நேரடியாக வழங்கப்படுகிறது.

வரும் 21 முதல் 23 ஆம் தேதி வரையிலான மூன்று தினங்கள் தொடர்ந்து ஆனலைன் மூலம் ஏப்ரல், மே  மற்றும் ஜூன் மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்டுள்ளதூ   திங்கள் முதல் புதன் வரை தினசரி 30000 டிக்கட்டுகளும் வியாழன்  முதல் ஞாயிறு வரை தினசரி 25000 டிக்கட்டுகளும் வழங்கப்பட உள்ளன.

அதாவது ஏப்ரல் மாத டிக்கட்டுகள் 21 ஆம் தேதி, மே மாத டிக்கட்டுகள் 22 ஆம் தேதி மற்றும் ஜூன் மாத டிக்கட்டுகள் 23 ஆம் தேதி ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது.   இந்த டிக்கட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையத்தில் மட்டுமே பெற முடியும்.   இலவச தரிசன டிக்கட்டுகள் திருப்பதியில் அலிபிரி பூதேவி காம்ப்ளெக்ஸ், , சீனிவாசன் காம்ப்ளெக்ஸ், ஸ்ரீ கோவிந்தசாமி சத்திரம் ஆகிய இடங்களில் அளிக்கப்படுகின்றன.