மதுரை:
திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழாவில் மகா தேரோட்டம் நடைபெற்றது.
முருகப்பெருமான், தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் அமர வைத்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.