சென்னை
ஆளுநரின் உரையால் தலித் மக்கள் ஏமாற மாட்டார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம்.
“தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மீண்டும், மீண்டும் ஒரு அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். கவர்னர் என்ற பொறுப்பை மறந்து அவர் பேசுவதும், செயல்படுவதும் தொடர்ந்து நீடிக்கிறது.
தலித்துகளை வலதுசாரிகளின் பக்கம் கவர்வதற்காக, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் தரப்பிற்கு ஈர்ப்பதற்காக அடிக்கடி அவர் தலித்துகளை பற்றியும் பேசுகிறார்.
தலித் ஒருவர் முதல்வராக வேண்டும் என்பது அப்பாவி தலித்துகளை வளைத்துப் போடுவதற்கான ஒரு சூழ்ச்சி. கவர்னரின் பேச்சால் ஒருபோதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித்துகள் ஏமாறமாட்டார்கள்.”
என்று தெரிவித்துள்ளார்.