திருச்செந்தூர்: ஆவணி திருவிழா கொடியேறியது! ஆகஸ்டு 31ல் தேரோட்டம்!!

Must read

திருச்செந்தூர்
ருபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவனித் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது.
Tiruchendur(C)
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஆகஸ்ட் 31 ம் தேதி நடைபெற இருக்கிறது.
திருச்செந்தூரில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி, மாசி மாத திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
tcr_veilammanavani.gif
ஆவணி மாதம் நடைபெறும் 12 நாள் திருவிழா மிகவும் சக்தி வாய்ந்தது. இன்று காலை அதிகாலை  5.30 மணிக்கு கோயில் செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். பக்தர்கள் புடைசூழ,  அரோகரா கோஷம் முழங்க  பிரகாரத்தில் உள்ள செப்பு கொடி மரத்தில் ஆவணித் திருவிழா ஆரம்பித்தற்கான கொடி அதிகாலை 5.30 மணி அளவில்ஏ ற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆவணி திருவிழா ஆரம்பானது.  மாலையில் அருள்மிகு அப்பர் சுவாமிகள் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப் பணி செய்தல், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 26ந்தேதியன்று (5வது நாள்) மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதியுலா வருவர்.

அடுத்த நாள் 27ந் தேதி (6வது நாள்) காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதியுலா வரும்.
7ம் திருவிழாவான 28ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, 8.30 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சப்பரம் சேரும். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்று, மாலை 4 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
8ம் நாள்  திருவிழாவான 29ந் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்ந்து, அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்று, பகல் 12.05 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதியுலா வந்து கோயில் சேர்தல் நடைபெறும்.
Tiruchendur-Murugan-temple
30ந்தேதி இரவு சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதியுலா வருதல் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறும். அன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர் வீதி வலம் வந்து நிலையைச் சேரும்.
 ஆவணித்திருவிழாவை முன்னிட்டு, ஒன்றாம் திருவிழாவான 22ந் தேதி யும், 7ம் நாள் திருவிழாவான 28ந் தேதியும் அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். 2ம் நாள் திருவிழாவான 23ந் தேதியும் மற்ற நாள்களிலும் வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு,  வழக்கம்போல்  மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

More articles

Latest article