ரியாத்

விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா விசா காலக்கெடுவை கூடுதலாக மூன்று மாதங்களுக்குச் சவுதி அரேபிய அரசு நீட்டித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் சவுதி அரேபியாவில் அதிக அளவில் இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.   இங்கு சுற்றுலா செல்லவும் பணி தேடவும் உறவினர்களைச் சந்திப்பது என பலபணிகளுக்கு வெளிநாட்டினர் சுற்றுலா விசா மூலம்  செல்கின்றனர்.  தற்போது கொரோனா பரவல் சவுதி அரேபியாவிலும் அதிகமாக உள்ளது.

இங்கு 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 411 பேர் உயிர் இழந்துள்ளனர்.  சவுதி அரேபியாவில் மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதுவரை இந்த சேவை தொடங்கப்படவில்லை.  ஆகவே சுற்றுலா விசா மூலம்  சென்றவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

சென்ற மாதம் சவுதி அரேபிய அரசு பிப்ரவரி 25 முதல் மே 25 வரைகாலாவதியாகும் பணியில் உள்ளோர் விசா கலாம் நீட்டிக்கப்பட்டது.  தற்போது சுற்றுலா விசாவுடன் உள்ள வெளிநாட்டினருக்கு விசாக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகச் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.  இந்த நீட்டிப்பு தானாகவே நீட்டிக்கப்படும் எனவும் இதற்காக அலுவலகங்கள் செல்லத் தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.