பெர்லின்

கொரோனாவை கட்டுப்படுத்த ஜூன் 29 வரை சமூக இடைவெளி விதிகளை பின்பற்ற வேண்டும் என ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் ஜெர்மனி 8 ஆம் இடத்தில் உள்ளது.  சுமார் 8.3 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.   இந்நாட்டில் சுமார் 35 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சோதனை நடந்ததில் இங்கு 1.81 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட 8500 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதையொட்டி இங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில வாரங்களுக்கு முன்பு தளர்த்தப்பட்டுள்ளது.   இது குறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், “கொரோனா பரவலில் ஜெர்மனி முதல் கட்டத்தைக் கடந்து விட்டது.  இதனால் ஊரடங்கு உத்தரவு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.  இன்னும் சில தினங்களில் கடைகள், பள்ளிகள், விடுதிகள் உணவகங்களைத் திறக்க திட்டமிட்டு வருகிறோம்.

ஆயினும் கொரோனாவை கட்டுப்படுத்த ஜெர்மனில் ஜூன் 29 ஆம் தேதி வரை சமூக இடைவெளி விதிகள் பின்பற்றல் தொடரும்.  இந்த கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கால்  ஜெர்மனியில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  எனவே அதை மீட்டெடுக்கும் பணிகளில் ஜெர்மனி தீவிரமாக இறங்கி உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.