புனே

கொரோனா பரவல் அதிகரிப்பால் அடுத்த வாரம் வரை புனே நகரில் உள்ள அனைத்து பள்ளிகள்  மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.   நேற்று வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 20,93,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதில் 51,763 பேர் உயிர் இழந்து 19,92,530 பேர் குணம் அடைந்து தற்போது 48,439 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இதையொட்டி பல நகரங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புனே நகரில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளது.  இங்கு நேற்றுவரை 3,99,254 பேர் பாதிக்கப்பட்டு அதில் 8,028 பேர் உயிர் இழந்து 3,81,961 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 9,217 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  எனவே இங்கு பொது முடக்கம் கடுமையாக்கப்பட்டுள்ளது.  இங்கு உணவு விடுதிகளும் ஓட்டல்களும்பார்களும் இரவு 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளது.

புனே நகரில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் வரும் 28 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.   இந்த கொரோனா பாதிப்பு மேலும் 3 மாதங்களுக்கு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.  எனவே இவ்வாறு ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் புனே மாநகர நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.