ஸ்ரீநகர்: காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களை அடுத்து, அங்கு காவல் துறை தலைவர் விஜய் குமார் உத்தரவின் பேரில் கண்காணிப்பு நடவடிக்கைகள்  அதிகப்படுத்தப்பட்டு உள்ளன. இந் நிலையில், சில நாட்களுக்கு முன் போலீசார் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

ஆனால் அவர்கள் தலைமறைவாக அனந்த்நாக் பகுதியில் இருந்து, 3 ஏ.கே ரக 56 துப்பாக்கிகள், 2 சீனநாட்டு துப்பாக்கிகள்,  2 சீன கையெறி குண்டுகள், ஒரு தொலைநோக்கி உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.