லக்னோ:

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட உத்திரப்பிரதேச மாநில கிராமம் ஒன்றில் கட்டப்பட்ட கழிவறையில், தமிழக அரசின் சின்னம் பொறித்த டைல்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.


உத்திரப்பிரதேசத்தில் புலந்தர்ஷா பகுதியில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 508 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இதில் திபாய் தெஹசில் என்ற கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 13 கழிவறைகளில் தமிழக அரசின் சின்னம், மகாத்மா காந்தி மற்றும் அசோக சக்கர உருவங்கள் பொறிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கிராம வளர்ச்சித் துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் சின்னம் பதித்த டைல்ஸ் கற்கள் அங்கே எப்படி சென்ற என்பது குறித்து இரு மாநில அரசுகளும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.