அரியானா மாநில சட்டமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு டிக்டாக் புகழ் பிரபல நடிகை சோனாலிக்கு தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கி உள்ளது.
அரியானா முன்னாள் முதல்வரான பஜன்லால் தொகுதியை கைப்பற்றும் நோக்கில் பாஜக டிவி நடிகை சோனாலி பொகத்தை (Sonali Phogat) களத்தில் இறக்கி உள்ளது. இது பாஜக தொண்டர் களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்றொருபுரத்தில் சர்ச்சையையும் உருவாக்கி உள்ளது.
90 உறுப்பினர்கள் கொண்ட அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது அதற்கான 78 வேட்பாளர்களை அடங்கிய பெயர் பட்டியலை பாஜக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் தற்போது பாஜக எம்எல்ஏக்களாக உள்ள 38 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்களுக்கு சீட்டு வழங்கி தேர்தலில் வெற்றியை குறிவைத்து உள்ளது. அதன்படி, பாஜகவில் புதியாத கட்சியில் இணைந்துள்ள விளையாட்டு வீரர்கள், நடிகைகளுக்கு சீட் வழக்கி வரகிறது. ஏற்கனவே மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் சந்திப் சிங், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது.
தற்போது அரியானா தேர்தலில் பிரபல தொலைக்காட்சி பிரபலமும், டிட்டாக் பிரபலமுமான சோனாலி பொகாத்துக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது.
அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் வசித்து வருகிறார் பொகாத். 20ஆண்டுகளுக்கு மேல் நடிகையாக பல்வேறு திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். சமீப காலமாக டிக்டாக் செயலி மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்து உள்ளார். இவரை 6.5 லட்சம் பேர் சமுக வலைதளங்களில் ரசிகர்களாக உள்ளனர்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரதியஜனதா கட்சியில் சேர்ந்த நிலையில், தற்போது அவருக்கு தேர்தலில் எளியாக வெற்றி பெற்றுவிடுவார் என்ற நோக்கித்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி முன்னாள் முதல்வர் பஜன்லால் தொகுதியான ஆதம்பூர் சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏ வேட்பாளராக சோனாலி பொகத் களம் இறக்கப்படுவார் என அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் சோனாலிக்கு சமூக வலைத்தளத்தில் இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சோனாலி நிச்சயம் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆக வாழ்த்துகள் என்று மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
சோனாலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள பாஜக நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.