புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

நாட்டின் நடக்கும் கும்பல் வன்முறை குறித்து கவலை தெரிவித்து பிரதமர் மோடிக்கு வெளிப்படையாக கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி அவர் இதைக் கூறினார்.

“பிரதமருக்கு எதிராக யாரேனும் ஏதாவது கூறினாலோ அல்லது இந்த அரசுக்கு எதிராக யாரேனும் விமர்சனத்தை முன்வைத்தாலோ அவர்களை தாக்குவதையோ அல்லது சிறையில் தள்ளுவதையோ வாடிக்கையாக வைத்துள்ளது இந்த அரசு. ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகிறது.

நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, இதில் ரகசியம் ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் மொத்த உலகமுமே அதை அறிந்துள்ளது.

சர்வாதிகார நாடு என்ற நிலையை நோக்கி நாம் போய்க் கொண்டுள்ளோம். இது மிகவும் தெளிவான ஒன்று” என்று சாடியுள்ளார் ராகுல் காந்தி.