டெல்லி:
தூக்கு தண்டனை கைதிகளை தூக்கிலிட எங்களிடம் ‘ஹேங்மேன்’ இல்லை என்று தலைநகர் டெல்லியில் உள்ள திகார் ஜெயிர் நிர்வாகம் கைவிரித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், பாலியல் உள்பட கொடிய குற்றச்செயல்கள் புரிந்த தூக்கு தண்டனை கைதிகளுக்கு உடனே தூக்குத்தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று பொதுமக்கள் போர்க் கொடி தூக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிர்பயா பாலியல் வன்புணர்வு, கொலை குற்றவாளிகளுக்கு தூண்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஹேங்மேன் (தூக்கிலிடுபவர்) இல்லை என்று திகாரி சிறை அதிகாரி தெரிவித்து உள்ளார். மேலும், வேறு மாநிலங்களில் இருந்து ஹேங்மேன் அழைக்கப்படு வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டும் டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்ட நிலையில், ஒருவர் 16வயதுக்கு குறைவானவர் என்பதால், அவரும் தண்டனையில் இருந்து தப்பித்தார். மற்ற 4 பேருக்கும் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள டெல்லி திஹார் சிறை அதிகாரி ஒருவர், “இங்கு தூக்கிலிடும் பணியைச் செய்யும் ஹேங்மேன் இல்லை என்று கைவிரித்து உள்ளார்.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து ஹேங்மேனைப் பெறுவோம், அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்று கூறி உளளார்.
இதற்கிடையில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலடும் பணியைச் செய்ய நான் தயார் என தமிழகத்தின் ராமநாதபுரம் காவல்நிலையித்தில் ஏட்டாக பணியாற்றி வரும் சுபாஷ் சீனிவாசன் என்ற காவலர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திகார் சிறையின் தலைமை இயக்குநருக்கு அவர் கடிதமும் அனுப்பி உள்ளார்.