
அஜித்தின் விவேகம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் காலை ஆறு மணிக்கே முதல் காட்சி வெளியிடப்பட்டது. கிட்டதட்ட எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டு விற்கப்பட்டது.
தாம்பரம் வித்யா திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த விலையை விட உயர்த்தப்பட்டு 500 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்பட்டது.
இதை ரசிகர்கள் வீடியோ எடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தவிர புகார் நகலை நடிகர் சங்கத்துக்கும், வட்டாச்சியர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைத்தனர்.
உடனே தாம்பரம் வித்யா திரையரங்கு உரிமையாளர் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரிக்கப்பட்டார். 500 ரூபாய்க்கு விற்றதை ஒப்புக் கொண்டார். கூடுதலாய் வசூலிக்கப்பட்ட பணத்தை திருப்பி கொடுப்பதாக கடிதம் எழுதி கொடுத்தார்.
டிக்கெட் விலையை கூடுதலாக வைத்து விற்றால் இது போல ரசிகர்கள் செய்யலாமே..
[youtube-feed feed=1]