சென்னை:
மிழகத்தில் 17ந்தேதி முதல் பேருந்து சேவை தொடங்கும் என தமிழகஅரசு அறிவித்துள்ள நிலை யில், ஆம்னி பேருந்துகளும் இயக்க அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேருந்தில், சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டியதிருப்பதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க தலைவர் தெரிவித்து உள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 17ந்தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் சென்னையில் தீவிரமாக பரவி வரும் கொரோனா காரணமாக, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டள்ளது.
இந்த நிலையில்,  மே 17ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அரசு பேருந்துகள் 50 சதவிகிதம் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக ஆம்னி பேருந்துங்களும் இயக்க அனுமதி வழங்கப்படும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க தலைவர் அப்சல் தெரிவித்து இருக்கிறார்.
தற்போது அதிகாரபூர்வமாக ஒரு கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும்போது புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்று தெரிவித்து உள்ளார்.