சென்னை: புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 22-ம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிநடைபெற உள்ளதால், அதற்கான கவுண்டர் டிக்கெட் விற்பனை இன்று காலை 11மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வரும் மார்ச் 22இல் நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்து, இதன் (ஐ,ஜே மற்றும் கே) புதிய கேலரியை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் டி 20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 7 ஆட்டங்களை இந்த மைதானத்தில் விளையாடுகிறது.
இந்த சீசனில் தனது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே வரும் ஏப்ரல் 3-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சந்திக்கிறது. 4 வருடங்களுக்குப் பிறகு சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் விளையாட உள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்தியாவில்சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணி பல்வேற போட்டிகளில் கலந்துகொண்டு ஆடி வருகிறது. இதன் கடைசி மற்றும் 3-வது ஆட்டம் வரும் 22-ம்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்துக்கான கவுன்ட்டர் டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணி அளவில் தொடங்குகிறது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
டிக்கெட்கள் விற்பனை ஏற்கனவே ஆன்லைனில் தொடங்கப்பட்டதையடுத்து, நேரடி டிக்கெட்கள் விற்பனை இன்று காலை 11மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட் விலை ரூ.1,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெகு நாட்களுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறுவதால் இது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ரசிகர்கள் நேற்றிரவு முதலே மைதானத்திற்கு திரண்டு வந்துள்ளனர்.