டில்லி:

சுவாச பிரச்சினை காரணமாக  திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமா டில்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல்  தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திபெத் புத்த மத குருவான 83-வயதான தலாய்லாமா,  உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மூச்சு விட சிரமப்பட்டதை தொடர்ந்து, தர்மசாலாவில் இருந்து  டில்லிக்கு அழைத்து வரப்பட்டார். டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தலாய் லாமாவுக்கு நுரையீரல் தொற்று இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

தற்போது தலாய் லாமாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.