மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரிப்பில் உருவாகும் படம் ‘துப்பறிவாளன் 2’.
இந்தப் படத்தில் புதுமுகம் அஷ்யா நாயகியாக நடித்து வருகிறார். மேலும், பிரசன்னா, கெளதமி, ரகுமான், ரமணா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுமார் 40 நாட்களாக லண்டனில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது என விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.