சென்னை: ஜூலை 11ந்தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்ததைத் தொடர்ந்து, ஒபிஎஸ் கோபமாக மேடையில் இருந்து கிழே இறங்கி வெளியேறினார். அப்போது அவர்மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இது பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் வந்த வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்,  ஓபிஎஸ் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு கூட்டம் செல்லும்  என கூறினார்.

அதிமுக பொதுக்குழுவில்  இரங்கல் தீர்மானம், அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அடுத்த அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ந்தேதி நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார். இதையடுத்து ஓபிஎஸ் பேச முற்பட்டார். ஆனால், அதற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவேசமாக கோஷமிட்டனர். அப்போது ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் கோபமாக  மேடையில் இருந்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜெ.சி.டி பிரபாகரன் மீது  தீர்மான நகல்களை இபிஎஸ் ஆதரவாளர்கள்  கிழித்து எறிந்து துரோகி என  முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தொண்டர்களை அமைதியாக இருக்கும்படி இபிஎஸ் கோரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பி.எஸ் வந்த பரப்புரை வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்,  ஓபிஎஸ் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு கூட்டம் செல்லும்  என தெரிவித்துள்ளார்.