சுவீடன்

ந்த வருடத்துக்கான இயற்பியல் பிரிவு நோபல் பரிசு மூவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறையிலும் தலை சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

உலகின் மிக உயரிய விருதான இந்த நோபல் பரிசு பெறுபவர்களில் இன்று இயற்பியலுக்கான பரிசு பெற்றோர் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இந்த பரிசை மூவர் பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த வருடத்துக்கான நோபல் பரிசு ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்ட் கென்சல் மற்றும் ஆண்ட்ரியா கேஸ் ஆகிய மூவருக்கு இயற்பியலுக்காக அளிக்கப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் பென்ரோஸ் சார்பியல் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு கருந்துளைகள் குறித்து ஆய்வு நடத்தியதற்காகப் பரிசு பெற்றுள்ளார்.

ரெயின்ஹார்ட் கென்சல் மற்றும் ஆண்ட்ரியா கேஸ் ஆகியோர் இருவரும் விண்மீன்கள் மையத்தில் உள்ள துகள்கள் சார்பாக ஆய்வுகள் நடத்தி உள்ளனர்.