புனே

ணமதிப்பிழப்பு நடவடிக்கையில் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடிக்கும் அதிகமான ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று இரவு திடீர் என பிரதமர் மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார்.  கருப்புப் பணம் ஒழிப்புக்காக இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கபட்டதாக கூறப்பட்டது.

பொதுமக்கள் தங்களிடம் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாத நோட்டுக்களை மாற்ற பெரிதும் துயரடைந்தனர்.    இந்த நோட்டுக்களை மாற்ற வரிசையில் நின்றவர்களில் சிலர் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.    இந்த செல்லாத நோட்டுக்களில் 99%க்கும் மேல் மாற்றப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்நிலையில் புனே நகரில் நேற்று காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான இந்த செல்லாத நோட்டுக்கள் பிடிபட்டுள்ளனர்.   இதை ஒட்டி மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   ஒருவர் தப்பி ஓடி விட்டார்.   மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது.