சிசி வெளியிட்ட டி20 உலகக் கோப்பை 2022  சிறந்த அணி வீரர்கள் பட்டியில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதன்படி விராட் கோலி, சூர்யகுமார், அர்ஷ்தீப்சிங் ஆகியோர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை 2022 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இடம்பெற்றிருந்த இந்திய அணி ஏற்கனவே வெளியேறிய நிலையில், இறுதிப்போட்டி, பாகிஸ்தான் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே நடைபெற்றது.  இதில், பாகிஸ்தானை  வீழ்த்தி இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதையடுத்து, டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான ஐசிசி தனது சிறந்த அணியை வெளியிட்டது. அதில், இந்திய அணி வீரர்கள் மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர்.  இங்கிலாந்து அணியிலிருந்து மூன்று வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி அறிவித்துள்ள பட்டியலில், இந்திய அணி சார்பில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர்.

விராட் கோலி 6 போட்டிகளில் 98.66 சராசரியில் 296 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த தொடரில் நான்கு அரை சதங்கள் உட்பட 136.40 ஸ்ட்ரைக் ரேட் பெற்றிருந்தார்.

சூர்யகுமார் யாதவ் ஆறு போட்டிகளில் 239 ரன்களுடன் மூன்று அரைசதங்கள் உட்பட மூன்றாவது அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.

தனது முதல் டி20 உலகக் கோப்பையில் விளையாடிய அர்ஷ்தீப் ஆறு போட்டிகளில் 15.60 சராசரி மற்றும் 7.80 என்ற எகானமி ரேட்டில் 10 விக்கெட்டுகளை எடுத்தார்.

ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2022 சிறந்த அணி

அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து)

ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)

விராட் கோலி (இந்தியா)

சூர்யகுமார் யாதவ் (இந்தியா)

கிளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து)

சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே)

ஷதாப் கான் (பாகிஸ்தான்)

அன்ரிச் நார்ட்ஜே (தென் ஆப்பிரிக்கா)

மார்க் வூட் (இங்கிலாந்து)

ஷஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்)

அர்ஷ்தீப் சிங் (இந்தியா)

அதிக ரன்கள் எடுத்தவர்கள்:  2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 296 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், டி20 உலகக் கோப்பையின் இரண்டு தொடர்களிலும் அதிக ரன் குவித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். கோலி 2014ல் 319 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தின் மேக்ஸ் ஓ’டவுட் மற்றும் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 2022 தொடரில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

அதிக விக்கெட் எடுத்த பவுலர்கள்: இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க 15 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் நாயகனாக இங்கிலாந்தின் சாம் கர்ரன் மற்றும் நெதர்லாந்தின் பாஸ் டி லீட் ஆகியோர் தலா 13 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜிம்பாப்வேயின் பிளஸ்ஸிங் முசரபானி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி 4வது இடத்தில் உள்ளார்.