சென்னை:
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 15 நாளில் பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவனது குடும்பத்தினரிடையை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் 3 மருத்துவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை கோயம்பேடு கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த நிலையில், சென்னையில் கொரோனா பரவல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.  இந்த நிலையில்,  கோடம்பாக்கத்தை சேர்ந்த 31 வயது ஆண் மருத்துவருக்கு அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்க நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதே போல சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது ஆண் மருத்துவர் மற்றும் கொரட்டூரை சேர்ந்த 45 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் திருவல்லிக்கேணி பகுதியைச்சேர்ந்த 10ம் வகுப்பு மாணவனுக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
இதன் காரணமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனைகள் நடந்து வருகிறது