ஈரோடு
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தில் உள்ள மூவர் மரணம் அடைந்ததில் காவல்துறையினர் சந்தேகம் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது சித்தோடு. இந்த ஊரின் அருகில் உள்ள ஒரு கிராமம் தயிர்பாளையம் ஆகும். இங்கு ஒரு வீட்டில் எரிவாயு திடீர் என வெடித்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த ஜெயமணி மற்றும் அவரது இரு மகள்களான தனிஷ்யா மற்றும் பவித்ரா ஆகியோர் மரணம் அடைந்துள்ளனர்.
காவல்துறை எரிவாயு சிலிண்டர் வெடித்த வீட்டுக்கு வந்து மூவரின் சடலங்களையும் கழிவறையில் இருந்து மீட்டுள்ளனர். எரிவாயு சிலிண்டர் இருந்தது படுக்கை அறை என்பதாலும், மூவரின் சடலங்கள் கழிவறையில் மீட்கப்பட்டதாலும் காவல்துறையினருக்கு சந்தேகம் உண்டாகி உள்ளது. இது விபத்தா ? கொலையா? அல்லது தற்கொலையா? என்னும் கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.