மனம் இணையாவிட்டாலும், பணம் இணைந்து விட்டதே: மைத்ரேயனுக்கு ராமதாஸ் பதில்

Must read

சென்னை,

திமுக அணிகள் இணைந்துவிட்டன, மனங்கள் இணையவில்லை என்று மைத்ரேயன் எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இது அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மைத்ரேயன் டுவிட் குறித்து பாமக தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டிருப்பதாவது,

அதிமுக அணிகள் இணைந்தன. மனங்கள் இணையவில்லை: மைத்ரேயன் எம்.பி – அதனாலென்ன பணங்கள் இணைந்து விட்டனவே?

என்று மைத்ரேயன் டுவிட்டுக்கு பதில் டுவிட்டியுள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளரான மைத்ரேயன் டுவிட் அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக எம்.பி. தம்பித்துரை, மைத்ரேயன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என்றார். ஆனால்,  மைத்ரேயன், இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத் தான் நான் எதிரொலித்துள்ளேன் என்று மீண்டும் டுவிட்டினார்.

இதன் காரணமாக அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ் பிரிவு ஏற்பட்டு விடுமோ என அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவு நாஞ்சி சம்பத் கூறும்போது, மைத்ரேயன் மனதில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article