சென்னை :

கலப்பட உணவுகள் விற்பனையில் தமிழகம் நாட்டிலேயே 2வது இடத்தில் இருப்பதாகவும், இது தொடர்பான புகாரின்பேரில் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுவதாகவும்,  உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

உணவு கலப்படம் செய்பவர்களில்  13 சதவிகிதம் பேரிடம் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கலப்பு உணவு குறித்து நடைபெற்ற ஆய்வில், உத்தரபிதேசத்தை தொடர்ந்து, தமிழகத்தில்தான் அதிக அளவு கலப்பட உணவு இருப்பதாகவும், அதிக அளவில்  கலப்பட உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்து உள்ளது.

உணவு மாதிரிகளை சரிபார்ப்பதிலும், கலப்படம் செய்வதற்காக வழக்குகள் பதிவு செய்வதிலும் தமிழகம் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றாலும், அதை தடுக்கும் முயற்சியில் தமிழகம் சரியானமுறையில் ஈடுபடுவதில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளது.

பொதுமக்களிடமிருந்து உணவு மாசு குறித்து வரும் புகார்கள் அதிகரித்த போதிலும், கடந்த ஆண்டு மாநிலத்தில் உணவு கலப்படம் செய்பவர்களில் 13% க்கும் குறைவானவர்கள் தண்டிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில்,  2018-19ம் ஆண்டுகளில் உணவு மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்றில் ஒரு பங்கு உணவு கலப்படம் செய்யப்பட்டவை; என்றும் தெரிவித்து உள்ளது.

2018-19 ஆம் ஆண்டில் உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 2,384 வழக்குகளில், 300 மட்டுமே தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள ஆணையம், காட்டுகிறது. இது போன்ற வழக்குகளுக்கான தண்டனை விகிதம் மாநிலத்தில் எப்போதும் குறைவாகவே உள்ளதால்தான் இதுபோன்ற தவறுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துஉள்ளது.

கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கு பிறகு உணவுப் பாதுகாப்புத் துறையால் பெரிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், கலப்பட உணவுப்பொருட்கள் காரணமாக இதுவரை அபராத மாக ரூ .5 கோடி வசூலிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து தவறுகள் நடைபெற்று வருவதாகவும்,, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டத்தில் கடுமையான விதிகள் இருந்தாலும், மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படாவிட்டால் கலப்படம் செய்வது தொடரும் என்றும் தெரிவித்து உள்ளனர்.