சென்னை:

மிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், ஓசைப்படாமல் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு அரசு பள்ளியில் மாணவ மாணவிகள் அழகாக இந்தி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் படித்து வரும் வெளிமாநிலங்களை சேர்ந்த குழந்தைகள், இந்தி மொழியை கற்றுக்கொள்ளும் வகையில் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் சேர்ந்து தமிழக குழந்தைகளும் இந்தி படித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிறுபுழல்பேட்டை என்ற பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு அந்த பகுதிகளில் உள்ள தொழிற்நிறுவனங்களில் வேலை செய்து வரும் வடமாநிலத்தவர்களின் குழந்தைகள் பலர் படித்து வருகின்றனர்.

மத்திய அரசின்  ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான பிரத்யேக வகுப்புகளை இந்தப் பள்ளி நடத்தி வருகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பள்ளியின் சிறப்பு மையங்களில் கற்பிப்பதற்காக தொழிலாளர்கள் மத்தியில் இருந்து தகுதியானவர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவர்களின் கல்வியும் பாதிக்கப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வடமாநில குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கும் தமிழக குழந்தைகளும் இந்திய கற்று வருகின்றனர்.  இது பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.