மும்பை

மும்பை நகர மின்சார ரயில்களில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் பயணிக்க மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த எப்ர்ல் மாதம் முதல் கொரோனா 2ஆவது அலை காரணமாக மும்பையில் மின்சார ரயில்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. பிறகு அத்தியாவசிய, சுகாதார மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் பொதுமக்கள் அலுவலகம், வேலைக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

கடந்த மாதம் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களை மின்சார ரயில்களில் அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மிலிந்த் தியோரா மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். பல்வேறு தரப்பினரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர்.

 மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே சமூகவலைத்தளம் மூலமாகப் துமக்களிடம் உரையாற்றினார். அவர், மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

இது குறித்து அவர் ”இதுவரை மும்பையில் 19 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். ௧ எனவே, முதல் கட்டமாக மின்சார ரயில்களில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 2ஆவது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் முடிந்தவர்கள் வருகிற 15ஆம் தேதி முதல் மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம்.

தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் பெற செல்போன் செயலி உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்ட விவரங்களை கொடுத்து அதில் டிக்கெட், மாத சீசன் பாஸ் பெறலாம்.

ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் நேரடியாகவும் டிக்கெட், மற்றும் பாஸ் பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் வார்டு ஆபிஸ், புறநகர் ரயில்நிலையங்களிலும் டிக்கெட் பெறலாம். இந்த சீசன் பாஸ்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிய க்யுஆர் கோடு வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்