சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகள் மூலம் ரூ. 3000 உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை வாங்காதவர்கள் வாங்கிக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழர்களின் திருநாளாம், அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சில ஆண்டுகள் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், வேட்டி, சேலை, பச்சரிசி, சக்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த 2025ம் ஆண்டு நிதிநிலைமையை காரணம் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் வழங்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழ்நாடு அரசு தாராளமான ரூ.3000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது.
இந்த நிகழ்ச்சி 2026 ஜனவரி 8ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கப்பட்ட நிலையில் ஜனவரி 14ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பானவது வழங்கப்பட்டது. அந்த வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பானது 2,22,91,710 அரிசி பெறும் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் தேதி வரை 2.15 கோடி பயனாளர்களுக்கு அதாவது 97 % பேருக்கு ரூ.6453.54 ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்னும் 7 லட்சம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காமல் உள்ளனர் அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகைப்பை நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]